பெறப்பட்ட திட்ட அனுமதியை மீறி கட்டப்படும் கட்டிட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை! சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பெறப்பட்ட கட்டட திட்ட அனுமதிக்கு மாறக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டட திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டடங்களை சம்பந்தப்பட்ட பொறியாளர் கட்டுமான நிலையிலேயே தடை செய்ய நோட்டிஸ் வழங்க வேண்டும், மீறி கட்டப்பட்ட கட்டடங்களில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டட திட்ட அனுமதிக்கு மாறக கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறமால் கட்டப்படும் கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வார்டின் உதவி பொறியாளர் அல்லது இளைநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்களுக்கு கள ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு நகரமைப்பு திட்ட சட்டம் 1971 (Tamil Nadu Town and Country Planning Act 1971) நடவடிக்கை எடுக்க ஆணையாளர் அவர்களால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் தங்கள் பகுதிகளிள் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்கு சென்று கட்டுமான நிலையிலேயே கண்டிப்பாக ஆய்வு செய்து கட்டட திட்ட அனுமதி உள்ளதா எனவும், திட்ட அனுமதிப்படி கட்டுமானம் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் கள ஆய்வின்போது கட்டட திட்ட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடைபெறும் கட்டடங்களின் கட்டுமான பணியை கட்டுமான நிலையிலேயே நிறுத்த நோட்டிஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

திட்ட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நுழைவுவாயிற் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அகற்ற நோட்டிஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

மேலும் கட்டப்படும் ஒவ்வொறு முறையான திட்ட அனுமதி பெறப்பட்டு திட்ட அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டப்படுவதை அலுவலர்கள் 100% உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai corporation commissioner warns public for building construction


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->