சென்னையில் இன்று மலர் கண்காட்சி தொடக்கம்.. எங்கு தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் இன்று (ஜூன் 3ஆம் தேதி) முதல் 5ம் தேதி வரை 3 நாட்களுக்கு மலர்கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி பெங்களூர், உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு வந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். இதற்கு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai flower exhibition starts Today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->