சென்னை கார் பந்தயத்திற்கு தடையா? சற்றுமுன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Chennai Formula 4 Race TNGovt High Court
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது குறித்து சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிரிக்கப்பட்டுள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக, பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் தொடந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுமக்களுக்கு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்கக் கூடாது என்றும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என்றும், மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் ஸ்ட்ரீட் சர்க்யூட் உரிமம் பெறப்படவில்லை, உரிய ஒப்புதலும் பெறப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
வருகின்ற 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த கார் பந்தத்திற்கு எதிரான வழக்கில், பொதுமக்களுக்கு மருத்துவமனைகளுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசு தரப்பில், சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும், மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு போக்குவரத்து மாற்றப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
English Summary
Chennai Formula 4 Race TNGovt High Court