தஞ்சாவூர் ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
chennai hc order thanjavur district collector present of water places Occupy case
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என்று தஞ்சாவூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், கும்பகோணம் கோவில் குளங்கள், நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ''கும்பகோணம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும்.
மாற்று இடம் வழங்கி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததில் இருந்து அவர் ஆட்சியராக இருக்க தகுதியானவர் இல்லை என்று தெளிவாகிறது. கும்பகோணம் கோவில் குளங்கள், அதற்கு நீர் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English Summary
chennai hc order thanjavur district collector present of water places Occupy case