ஈரோட்டில் இ பாஸ் முறையை அமல்படுத்த கோரிய வழக்கு - தேர்தல் ஆணையத்தை ரவுண்டுகட்டிய உயர்நீதிமன்றம்.!
chennai high court order to election commission for
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதையடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்தத் தொகுதியில் வாக்காளர்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தொகுதி யின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈ.வெ.ரா மரணத்தை தொடர்ந்து 2023-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும் ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைக்கப்பட்டனர்.
கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஓட்டுக்குக்கு பணம் வழங்கப்பட்டது. அதனாலேயே அந்த தேர்தலில் நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். தற்போது நடக்க உள்ள தேர்தலில் கொட்டகை பாணி பின்பற்றக் கூடும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 8-ந்தேதி மனு அளித்தேன்.
அதில், தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அதனை பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும். யார் தான் சலுகைகள் வழங்கவில்லை? இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
English Summary
chennai high court order to election commission for