கல்லூரி மாணவர்களிடையே மோதல் - உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!!
chennai high court special team form for college students fight
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த மோதல் ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
-lv5ph.jpg)
அதாவது, பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்படும் மோதலில் மாணவன் பலியானது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை தெரிவித்துள்ளது.
மேலும், பல தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் இதுபோன்ற குற்ற நடவடிக்கைகள் நடப்பது வேதனை அளிக்கிறது.
குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதிபதியின் இந்த உத்தரவின் மூலம் மாணவர்களிடையே மோதல் உருவாகாமல் தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.
English Summary
chennai high court special team form for college students fight