கோயில் விழாவில் இனி சினிமா பாடல்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
chennai highcourt tamil cinema song ban in temple festival
புதுச்சேரி: கோவில்களில் நடைபெறும் இசைக்கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும், சினிமா பாடல்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர், கோவில் விழாக்களில் சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், புதுவை திருமலையராயன்பட்டினம் பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் இசைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், இது பக்தி உணர்வுகளுக்கு எதிரானது என்பதால், கோவில்களில் இசைக்கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்படும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், கோவில்களில் இசைக்கச்சேரிகள் நடத்தப்படும் போது, பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும், சினிமா பாடல்களுக்கு அனுமதி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், கோவில்களில் பக்தி சார்ந்த சூழலைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
chennai highcourt tamil cinema song ban in temple festival