மக்களே உஷார்: இரண்டு நாள், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் வானிலை ஆய்வு மையம்!
Chennai IMD Report 12 dec 2024
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த தாழ்வுப் பகுதி, தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி முன்னேறும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 10: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
டிசம்பர் 11: கடலூர், மயிலாடுதுறை, மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 12: செங்கல்பட்டு, விழுப்புரம், மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
English Summary
Chennai IMD Report 12 dec 2024