திருவள்ளூர் முதல் மயிலாடுதுறை வரை... மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று!  - Seithipunal
Seithipunal


தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மாலை 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 100 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த புயல் புதுவைக்கு அருகே  இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் புதுவை, கடலூர், மயிலாடுதுறை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் வரை வீசக்கூடும்.

டெல்டா மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டரை எட்டும். மீனவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்வதை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.  

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், மற்றும் திருச்சி பகுதிகளில் கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக 2ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IMD Report Fengal Cyclone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->