இன்று நள்ளிரவு சம்பவம் இருக்கு! அடுத்த 7 நாள் தமிழகத்தின் நிலை என்ன? சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்! - Seithipunal
Seithipunal


வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டம் இன்று நள்ளிரவு வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சற்று வலுக்குறையக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "நேற்று (08-09-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு (08.09.2024 / 2330 மணி அளவில்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது.

இது  இன்று காலை 08:30 மணி அளவில் பூரியிலிருந்து (ஓடிசா) 50 கீ.மீ கிழக்கு-தென் கிழக்கே, கோபால்பூரிலிருந்து (ஓடிசா) 140 கீ.மீ கிழக்கு-வட கிழக்கே, பாரதீப்பிலிருந்து (ஓடிசா) 90 கீ.மீ தென்மேற்கே, கலிங்கபட்டினத்திலிருந்து (ஆந்திரா) 260 கீ.மீ கிழக்கு-வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. 

இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (09.09.2024) மதியம் ஒடிசா கடற்கரையை, பூரிக்கு அருகில் கடக்க கூடும். அதன் பிறகு இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சற்று வலுக்குறையக்கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

நாளை முதல் வரும் 15 ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IMD Report Tamilnadu Rain Alert


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->