மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்! - Seithipunal
Seithipunal


சென்னை : மெரினா கடற்கரையில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதும், தாக்குதலால் காயமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் மாட்டான் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரின் உறவினர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை எழுப்பி திட்டியதாக தெரிகிறது.

இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காவலர் யுவராஜ், லத்தியால் தாக்கியதில் வெங்கடேசன் என்பவருக்கு மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது.

இதனை அடுத்து அவர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அவரும் அவருடைய உறவினர்களும், மாட்டான் குப்பம் மக்களும் மெரினா காமராஜர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில், சமாதானம் அடைந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Marina maattan kuppam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->