சென்னை: 60 ஆண்டு பழமை.. காமராஜர் திறந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!
Chennai Old Building accident
சென்னை பாரிமுனை பிராட்வே பேருந்து நிலையம் எதிரே உள்ள 60 ஆண்டுகள் பழமையான சென்னை மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதி கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது.
இந்த விடுதி 1959-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி காமராஜர் திறந்து வைத்தது. மொத்தம் 342 அறைகள் கொண்ட இதில் 430 பேர் தங்கும் வசதி உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசு 4.24 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நீதித்துறைக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் அமைக்க அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, விடுதி செயல்படாமல் இருந்தது.
திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், இடிபாடுகள் அருகில் உள்ள நாராயணப்பா தெருவில் சிதறின. இதனால் அப்பகுதியில் சென்றிருந்த விஸ்வநாதன், சொக்கலிங்கம், சுப்பிரமணியன் ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
சுப்பிரமணியனுக்கு பின்தலையில் பலத்த காயம், காய்கறி வியாபாரி சொக்கலிங்கத்திற்கு இடது காலில் காயம், மற்றும் விஸ்வநாதனுக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டது. மூவரும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்தில்
English Summary
Chennai Old Building accident