சென்னை : ஒமைக்ரான் எதிரொலி., பள்ளி - கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தலைநகரான சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய ஓமைக்ரான் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 

* கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 

* பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? முகக்கவசம் அணிகிறார்களா? என்பதை ஆசிரியர்கள் கவனித்து உறுதி செய்ய வேண்டும். 

* பள்ளி, கல்லூரிகளில் கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

* ஒரே தட்டை பலர் உபயோகிக்கும்போது தொற்று எளிதில் பரவுவதற்கான அபாயம் உள்ளது என்பதால், விடுதிகளில் சாப்பிடும்போது சில்வர் தட்டுக்கு பதில், மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும். 

* வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது.

* சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். 

* மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் தொடந்து பரிசோதிக்கப்பட வேண்டும்.

* கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த விரும்பினால் மாநகராட்சியை தொடர்புகொள்ள வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai omicron issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->