சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு - போக்குவரத்து காவல்.!!
chennai police statement
சென்னை மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நிலவரங்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ளது.
இன்று (02.01.2022) சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.
1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:-
1) மெட்லி சுரங்கப்பாதை
2) ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை
2. மழைநீர் தேங்கியுள்ளதால் கிழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றனர்.
கே.கேநகர் : ரஈஜாமன்னார்சாலை
கே.பி.தாசன்சாலை
திருமலைபிள்ளைசாலை
பசூல்லாசாலை
3. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்:-
வாணிமஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கியுள்ள சுரங்கபாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்ப்செட்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு
தகுந்தாற்போல் சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.