மக்களே உஷார்! அதிர்ச்சி வீடியோ! மழை வெள்ளத்தால் சென்னையில் பலியான வட மாநில இளைஞர்! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் காரமணாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை வைத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை வார்டு 56, மண்ணடி பிரகாசம் பகுதியில் தனியார் வாங்கி ATMயில் பணம் எடுக்க சென்ற வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் (சந்தன்) மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்:

பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை செல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Rain flood yonugman death video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->