வட மாநிலம் போல் நடந்த பாலியல் துன்புறுத்தல் - அதிரவைத்த சென்னை இளைஞன் கைது! நடந்தது என்ன?!
Chennai train it women abused case young man arrested
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த சென்னை இளைஞரை நான்கு நாள் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கிஷோர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் தேதி, பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரயில்வே காவல்துறைகள் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
சம்பவம் நடந்த ஆண்டு பழனி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது, யாரும் இல்லாத நேரத்தில் ஐடி பெண் ஊழியரிடம் ஒரு இளைஞர் பாலியல் அத்துமிரலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து அந்த இளம் பெண் அளித்த புகாரின் பேரில்4 தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினமே குற்றவாளி கிஷோரின் புகைப்படத்தை வெளியிட்டு, போலீசார் தேடி வந்த நிலையில், இன்று சென்னையில் வைத்து கிஷோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரக்கோணம் வழியில் மின்சார ரயில்கள் ரத்து!
அரக்கோணம் பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், இன்றும், நாளையும் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை - திருவள்ளூர் இடையே மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும், திருவள்ளூரில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் இயங்காது என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது
English Summary
Chennai train it women abused case young man arrested