புயல் காற்றில் காணாமல் போன கணவர்.. கதறி அழும் பெண்மணி.!  - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயலின் காரணமாக சென்னை உத்தண்டி பகுதியில் கடல் சீற்றமானது நேற்று மிக அதிகமாக காணப்பட்டதுது. பல இடங்களில் தெருவுக்குள் கடல் நீர் புகுந்தது. அங்கே வேகமாக காற்று வீசிய காரணத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த பகுதியில் வழக்கமாக 3 முதல் 4 மீட்டர் இருக்கின்ற கடல் சீற்றமானது நேற்று 7 முதல் 8மீ வரை இருந்தது. இப்பகுதியில் அதிகப்படியான மீனவ கிராம மக்கள் இருக்கின்றனர். இதில் ஒரு பெண்மணி கதறி கதறி அழுதுக் கொண்டே போனக் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகின்றது. 

அவருடைய கணவரை நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளார். இதன் காரணமாக அந்த பெண்மணி பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். அங்கே
இது மிகவும் அபாயகரமான பகுதி யாரும் வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இப்பகுதியில் தங்கி இருந்த, மக்கள் அனைவரும் வேறொரு  பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். 

இருப்பினும், அந்த பெண்மணி தனது கணவரை காணவில்லை என்று அங்குமிங்கும் அலைந்து திரிந்த காட்சிகள் தற்போது கண்களில் கண்ணீர் வர வழைத்து இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Women search Her Husband in Cyclone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->