#BigBreaking || நாளை சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆருத்ரா தரிசன தேரோட்டத்துக்கு அனுமதி.!
Chidambaram Natarajar Therottam
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் விழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தில், கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக நடராஜர் கோவிலில் தேர் திருவிழா (தேரோட்டம்) ரத்து செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்மன் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆருத்ரா தரிசனத்தின் போது பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்றும், ஆனால் தரிசனம் முடிந்த பிறகு நாளை மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ் சன்னதி வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆருத்ரா தரிசன தேரோட்டத்துக்கு அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களின் போராட்டம் எதிரொலியாக நாளை தேரோட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
English Summary
Chidambaram Natarajar Therottam