திமுகவையும் பொங்கலையும் பிரிக்க முடியாது - முதல்வர் ஸ்டாலின்.!
chief minister mk stalin speech about periyar in kolathur pongal function
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 17-ம் தேதியும் விடுமுறை அறிவித்தோம். பொங்கல்தான் தமிழர்களுக்கான பண்டிகை என்றும் பெரியார் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், பொங்கல் பரிசாக திருக்குறளை தருகிறேன் எனக்கூறியவர் பெரியார். தமிழுக்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் கடைசிவரை பாடுபட்டவர். பெண்களின் உரிமை உள்ளிட்டவற்றுக்காக தொடர்ந்து போராடி வந்தார்.
பெரியார் குறித்து அவதூறாக பேசுவோர் குறித்து பேசி, அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை. மகளிர் உரிமைத்தொகை, பெண்கள் இலவச பயணம் போன்ற திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை ஒப்புக்கொள்கிறேன். நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதில் பின்வாங்க மாட்டோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
chief minister mk stalin speech about periyar in kolathur pongal function