வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்! இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல்!
Chief Minister MK Stalin went to Armstrong house and comforted him
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டினர்.
வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அக்கட்சி தேசிய தலைவர் மாயாவதி நெரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து போத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து வருகிறார். பின்னர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தஆம்ஸ்ட்ராங் படத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Chief Minister MK Stalin went to Armstrong house and comforted him