அதிகாலையில் நடந்த கொடூர விபத்து! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!   - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை கொடூர விபத்தில் பலியானவர்களுக்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மேட்டத்தூர் கிராமம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், J.S.நகர் அருகில் இன்று (25.09.2024) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் TN73 M 8384 என்ற பதிவெண் கொண்ட வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி (வயது 60), செல்வம் (வயது 50), ராமலிங்கம் (வயது 50), முருகன் (வயது 44), துரை (வயது 35)  மற்றும் சக்தி (வயது 20)  ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Condolence to Ulundurpettai Accident


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->