சென்னை மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன முதலமைச்சர் முக ஸ்டாலின்! இன்னும் 30% தான் மிச்சம் இருக்கு! - Seithipunal
Seithipunal


சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் குளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு, ர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர், சென்னை பள்ளிக்கரணை அருகே நாராயணபுரம் ஏரியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கை கொடுத்துள்ளது. 

தற்போது மழைநீர் வடிகால் பணிகள் 70 சதவிகிதம் முடிந்துள்ளது. இன்னும் 30 சதவீதம் மிச்சம் இருக்கிறது. அதுவும் விரைவில் நிறைவுபெறும்.

மழை நீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால், சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இந்த கனமழையில் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட முன் களப்பணியாளர்களுக்கு பாராட்டுக்கள்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin say about Chennai Rains Northeast monsoon


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->