தேனியில் நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன் படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

இதனால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேனியில் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பெரியகுளம் பகுதியில் நடைபயிற்சியின்போது அங்குள்ள உழவர் சந்தையில் பொதுமக்களை சந்தித்த அவர் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin vote collecting in theni


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->