#BigBreaking | தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
CM Mkstalin say about 1000 rupee 27032023
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகளிர் காண உரிமை தொகை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கத்தை அளித்துள்ளார்.
ஒரு கோடி குடும்பத் தலைவருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், அவரை உரையில், இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு இரண்டு நோக்கம் முன்னாடி காரணங்களாக உள்ளது. அதில், ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராம பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் முதுகெலும்பாக இருப்பது பெண்களின் முன்னேற்றம் தான்.
ஆணின் உழைப்பிற்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருப்பார் என்று சொல்வதுண்டு.
அந்த பெண்ணுக்கு நாம் செய்யக்கூடிய அங்கீகாரமாகவே இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தான் கொண்டு வந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யனிவர்சல் பேசிக் இன்கம் என்ற பெயரில் சோதனை முறையில் பல்வேறு நாடுகளில் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வறுமை பாதியாக குறைய வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுடைய தன்னம்பிக்கை உயரும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
CM Mkstalin say about 1000 rupee 27032023