கா.ம.கோவில் 3 சிறுவர்கள் பலி! வேதனையில் CM ஸ்டாலின்!
CM Stalin Condolence to KMKoil Childs death
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வெள்ளியங்கால் ஓடையில் நேற்று மாலை மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கொளக்குடியைச் சேர்ந்த உபயதுல்லா (வயது 8), முகமது அபில் (வயது 10), மற்றும் ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) என்ற மூவர் தங்கள் நண்பர்களுடன் ஓடையில் குளிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது பள்ளமான இடத்தில் தவறி விழுந்த மூவரும் நீரில் மூழ்கினர். மற்ற நண்பர்கள் உதவிக்கு ஓடி வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் மூன்று மணி நேரம் தொடர்ந்து தேடி, மூவரின் உடல்களையும் மீட்டனர். இது தொடர்பாக காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான செய்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட, அவர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.
English Summary
CM Stalin Condolence to KMKoil Childs death