ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்! கோவை விமான நிலையத்தில் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


கோவை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 90.28 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் இருந்து புது டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள், சிங்கப்பூா் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானம் இயக்கப்படுகிறது. 

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கவரி துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து அதிகாரிகள், சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததார். 

பின்னர் அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின் இருந்தது பயனிடம் 1.220 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதன் மதிப்பு 90.28 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தலில் ஈடுபட்டவரிடம் அதிகாரி தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Airport Rs 90 lakh worth Gold bars seized


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->