பேருந்து கூரையின் மீது ஏறி ரகளை செய்த மாணவர்கள்.. போலீசார் நூதன தண்டனை.! - Seithipunal
Seithipunal


பேருந்து கூரையின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு நீதிமன்றம் நூதனை தண்டனை வழங்கியுள்ளது.

சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் 56A பேருந்து கடந்த ஜூலை 22ஆம் தேதி வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றது. 

அப்போது பிரிந்து நிறுத்திய வண்ணாரப்பேட்டை தியாகராஜா கல்லூரி சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்தின் கூறை மீது ஏறிக்கொண்டு தியாகராஜா கல்லூரிக்கு ஜே!.. தியாகராஜா கல்லூரி புள்ளிங்கோக்கு ஜே! என கோஷமிட்டு ரகலையில் ஈடுபட்டனர்.

ஆபத்தான பயணம் மேற்கொண்டதால் பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் அச்சத்துடன் இருந்தனர். இதனால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார். பேருந்து கூரையின் மீது பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தியதாக தியாகராஜா கல்லூரியில் படிக்கும் கோகுலகிருஷ்ணன், பிரவீன், ஜோசப், பிரவீன் குமார் ஆகிய 4 பேரையும் பிடித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி முன்னிலையில் ஒப்படைத்தனர்.

அப்போது தவறு செய்த 4 பேரையும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து காலை, மாலை என தொடர்ந்து 7 நாட்கள் போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என நூதன தண்டனை வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து மாணவர்கள் மூலக்கொத்தளம் தங்க சாலை பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College students atrocity in bus police police punishment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->