அரசு பள்ளிகளை சீரமைக்க தலைமை செயளாலர் தலைமையில் குழு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசியுடன் கூடிய ஸ்மார்ட் போர்ட் நிறுவப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்ததோடு ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு இணையதள வசதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது. அதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் படி, பள்ளிகளில் கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில்  தலைமைச் செயலாளர் உட்பட 14 துறை செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3.06 லட்சம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்களின் வாயிலாக தமிழகத்தில் உள்ள 33, 550 பள்ளிகளில் தேவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Committee headed by Chief Secretary to renovate govt schools


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->