முதலமைச்சர் கணிணி தமிழ் விருது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் கணிணி தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கணிணி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் "முதலமைச்சர் கணிணி தமிழ் விருது" என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. 

2021-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதிற்கு தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தும் மென்பொருள்கள் உருவாக்கிய தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அந்த மென்பொருள்கள் வரவேற்கப்படுவதாகவும், விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கடைசி தேதி 31-12-2021 எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை வரும் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் விருதிற்கு பரிந்துரைக்கப்படும் மென்பொருள்கள் 2018, 2019 மற்றும் 2020 ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், விண்ணப்பங்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை -600008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Computer Tamil Software award


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->