திண்டுக்கலில் பரபரப்பு ! ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் : மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தொடர்வண்டி விபத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு ரயில்வே துறை மத்திய அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. ரங்கபானி ரயில் நிலையம் அருகே நேற்று காலை 9 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக மோதியதில் 9 பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்னல் கோளாறுகாரணமாக விபத்து ஏற்பட்டதாக பாஜக அமைச்சர்கள் கூறுகின்றனர். இந்த ரயில் விபத்தில் பலர் காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது மத்திய பாஜக அரசு கண்டதும் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதவி விலக வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர் ரயில் நிலையத்துக்குள் செல்லும் வென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீஸா இருக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  காங்கிரஸ் கட்சியில் இருந்த போராட்டத்தால் ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress party protests at the railway station


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->