13 , 14 வயது பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் தலைமறைவான தம்பதி; 07 ஆண்டுகளுக்கு பின் கைது..!
Couple absconding in the case of involving school students in prostitution arrested after 07 years
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் தலைமராவ இருந்த இரண்டு பேரை 07 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி மற்றும் 08-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியும் தோழிகளாக இருந்தனர். இதில் 13 வயது மாணவி பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தவர்.
ஒரு நாள் இந்த மாணவி அருகில் உள்ள இட்லிகடைக்கு பலகாரம் வாங்க சென்றார். அப்போது, அந்த கடை உரிமையாளரின் தனலட்சுமி, அவரது கள்ளக்காதலனான ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை இந்த 13 வயது மாணவி பார்த்துவிட்டார். இதனால், தனலட்சுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்துடன், தான் கள்ளக்காதலனுடன் தகாத முறையில் இருந்ததை அந்த மாணவி வெளியில் செல்லவிடாமல் தடுக்க திட்டம் போட்டுள்ளார். குறித்த 13 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று, தனது கள்ளக்காதலன் ஆனந்தராஜூடன் கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க வைத்தார்.
அத்துடன், ஆனந்தராஜ் அந்த மாணவியை மிரட்டி, தனது நண்பர்களான திட்டக்குடியை சேர்ந்த மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கும் விருந்தாக்கினார்.
மேலும், தனலட்சுமி குறித்த 13 வயது மாணவியை மிரட்டி, அவரது தோழியான 14 வயது மாணவியையும் ஆனந்தராஜிக்கு விருந்தாக்கினாள். அதனை தொடர்ந்து, மாணவிகள் இருவரையும் தனலட்சுமி விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு விருத்தாசலத்தை சேர்ந்த செல்வராஜ் மூலம் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்.

அதுமட்டுமன்றி, தனலட்சுமி திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு 02 நாட்கள் மாணவிகளை அனுப்பி வைத்ததோடு, மதபோதகர் அருள்தாஸ் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், கலாவும், தனலட்சுமியும் சக புரோக்கர்களும் 02 சிறுமிகளையும், விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், வடலூர், நெய்வேலி ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அடுத்ததாக, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார் (39), அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். அப்போது மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து திட்டக்குடிக்கு சென்று போலீசில் தகவல் தெரிவித்தனர்.
மாணவிகளில் புகாரின் அடிப்படையில், சதீஷ்குமார், தமிழரசி, திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக இந்தநிலையில், மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி இவ்வழக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து, அதில் குற்றம்சாட்டப்பட்ட ஒரு பெண் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 16 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்து இருந்தார்.
இதையடுத்து இவ்வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்தும் தேடி வந்தனர்.
இந்நிலையில் சதீஷ்குமார் கோவையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சென்று, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சதீஷ்குமாரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையில் வீட்டு வேலை செய்து வந்த தமிழரசியை போலீசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Couple absconding in the case of involving school students in prostitution arrested after 07 years