கடன் தொல்லையால் கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு... காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லையால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி சத்தியபாமா. இவர்கள் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியவர்கள் உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து, அவர்கள் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கடன் தொல்லையால தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Committed Suicide In Pazhani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->