தண்டவாளத்தை கடக்க முயன்ற காதல் ஜோடி - ரெயில் மோதி பலி.! - Seithipunal
Seithipunal


தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சடலமாக கிடப்பதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம், சிதம்பரத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி என்பது தெரியவந்தது. காதலர்களான இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு சில மாதத்துக்கு முன்பு சென்னையில் வேலை செய்வதற்காக வந்தனர். 

அதன் படி அவர்கள் பெருங்களத்தூர் பகுதியில் தனித்தனியாக அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு அரசு பேருந்து மூலம் பெருங்களத்தூர், இரணியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினர். 

அங்கிருந்து தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்கு செல்வதற்காக பேசிக்கொண்டே பெருங்களத்தூர் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது அந்தப்பகுதியாக வந்த மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

couples died in railway track for train accident at perungalathur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->