கடலூர் மாநகராட்சியில் 60 குப்பை அள்ளும் வாகனங்கள் மாயம்! அதிர்ந்துபோன மேயர்!
Cuddalore Corporation Vehicle missing
கடலூர் மாநகராட்சியில் மேயர் ஆய்வின்போது, 60 குப்பை குப்பை அள்ளும் வாகனங்கள் மாயமானது தெரியவந்துள்ளது.
குப்பை வாகனம் வருவதில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்து வந்த நிலையில், இந்த புகாரை அடுத்து கடலூர் மேயர் சுந்தரி, மாநகராட்சி ஆணையர் இன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இந்த ஆய்வுக்காக மாநகராட்சியின் குப்பை அள்ளக்கூடிய வாகனங்களை எடுத்து வரச் சொல்ல மேயர் உத்தரவிட்டிருந்தார்.
இதில் மொத்தம் 60 வாகனங்கள் மாயமானது மேயரின் ஆய்வின் போது தெரியவந்தது. இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மேயர் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
வாகனங்கள் பழுது அடைந்ததால் இந்த ஆய்வுக்கு கொண்டு வரமுடியவில்லை என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவித்து, சரிவர பதில் அளிக்காமல் மழுப்பி உள்ளனர்.
இதனை அடுத்து பழுதான வாகனங்களை நேரில் கொண்டு வர ஆணையிட்ட கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர், இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டனர்.
English Summary
Cuddalore Corporation Vehicle missing