கடலூரில் லாரி ஓட்டுனர்களுக்கு அரிவாள் வெட்டு, கொள்ளை! அராஜகம் செய்யும் கஞ்சா போதை ஆசாமிகள்!
Cuddalore Lorry drivers attacked money robbery cellphone robbery
விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் ஒரே இரவில் மூன்று வேறு இடங்களில் மர்மநபர்கள் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி, பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள எம். புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய பகுதிகளில் இந்த துணிகர தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரவு நேரத்தில் பைக்குகளில் வந்த மர்மநபர்கள், பெரும்பாலும் கஞ்சா போதையில் இருக்கும் சிறுவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
லாரி ஓட்டுநர்களை வழிமறித்து தாக்கிய பின்னர், அவர்களிடம் இருந்த பணம், செல்போன்களை பறித்ததோடு, ஜி-பே பாஸ்வேர்டையும் விசாரணை செய்து பணத்தையும் திருடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது, நான்கு வழிச்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் புகார் அளித்த நிலையில், சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
English Summary
Cuddalore Lorry drivers attacked money robbery cellphone robbery