கடலூரில் பரவும் மர்ம காய்ச்சல்.. ஒரே நாளில் மக்கள் குவிந்ததால்.. திண்டாடும் மருத்துவர்கள்.!! - Seithipunal
Seithipunal


பருவநிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக கடலூர் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை காலம் முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலை கடலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் கடும் வெயிலும் மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நீடித்து வரும் பருவநிலை மாற்றத்தின் எதிரொலியாக கடலூர் மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மர்ம காய்ச்சலுடன் சளி மற்றும் இரும்பல் சேர்ந்திருப்பதால் கடலூர் மாவட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் புற நோயாளிகளாக குவிய தொடங்கியுள்ளனர். இன்று காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் டோக்கன் பெற்றுக்கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகின்றனர்.

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அதிக அளவில் நோயாளிகள் வருவதால் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று கேரளாவில் கடந்த சிலர் நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore people stormed govt hospital due to mysterious fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->