ஓபிஎஸ் என்ற பெயரை யார் வைத்தது தெரியுமா? ஆப்பு வைத்த கையோடு, பழசை கிண்டும் சிவி சண்முகம்!
CV Shanmugam Say About OPS Name
தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் எம்பி, அதிமுகவின் எம்பியாக அங்கீகரிக்கக் கூடாது என்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிரீலாவிடம், அதிமுக சார்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் தெரிவிக்கையில், "இன்று தன்னை நம்பி வந்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டு, மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிற ஒரு கபடதாரி தான் ஓபிஎஸ்.
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் வழக்கில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது தேர்தல் ஆணையத்தாலும், நீதிமன்ற தீர்ப்புகளின் படியும் உறுதியாகிவிட்டது.
ஆகவே, அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரை ஆதரவாளர்கள் பயன்படுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. கண்டிப்பாக அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஓ பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் உடைய சந்திப்பு அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீவி சண்முகம், "என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஓபிஎஸ் உடன் இருப்பவர்களுக்கு தான் தாக்கத்தை ஏற்படுத்தும்.
யார் இந்த ஓபிஎஸ்? 2001 வரை ஓபிஎஸ்-யை யாருக்கும் தெரியாது. அவர் யாரால் உருவாக்கப்பட்டார். அவர் ஒரு களிமண்.
டிடிவி தினகரானால் உருவாக்கப்பட்டவர் தான் ஓ பன்னீர்செல்வம். அம்மாவால் உருவாக்கப்பட்டவர் அல்ல. இந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு ஓபிஎஸ் என்ற பெயரை கொடுத்து, அடையாளத்தை கொடுத்தது, சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, அமைச்சர், முதலமைச்சராக ஆக்கியது அனைத்தும் டிடிவி தினகரன் தான்" என்றார்.
English Summary
CV Shanmugam Say About OPS Name