#Breaking :: உயிரைப் பறித்த சூறைக்காற்று..!! மாண்டஸ் புயலுக்கு முதல் பலி..!! - Seithipunal
Seithipunal


காரைக்குடியில் அதிக காற்று வீசியதில் சிலிண்டர் டெலிவரி செய்யச் சென்ற நபர் மீது கண்ணாடி விழுந்து பலி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று மதியம் 12.30 மணி முதல் வழக்கத்தை விட பலத்த காற்று வீசி உள்ளது. இந்த நிலையில் காரைக்குடியில் சிறுக்கூடல்பட்டியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் தனியார் நிறுவனத்தில் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை செய்து வருகிறார். இவர் இன்று மதியம் 1:30 மணி அளவில் பர்மா காலனியில் பெரியார் நகர் 9வது வீதியில் சிலிண்டர் டெலிவரி செய்துவிட்டு வந்து கொண்டிருக்கும்போது அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கண்ணாடி அதிக காற்றின் அழுத்தம் காரணமாக பழனிச்சாமி மீது பெயர்ந்து விழுந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் பழனிச்சாமிக்கு கழுத்தில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்பு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பழனிச்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் உள்ள அனைத்து கண்ணாடிகளையும் அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வீதியில் சென்று கொண்டிருந்தவர் மீது கண்ணாடி விழுந்து பலியான சம்பவம் காரைக்குடியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cylinder delivery person killed by glass falling on him in Karaikudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->