திருப்பூரில் கொட்டித் தீர்த்த பேய்மழை!...வெள்ளக்காடாக மாறிய மாநகரம்!...வீடுகள் இடிந்து விழுந்து, பொதுமக்கள் பள்ளிகளில் தங்கவைப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, திருப்பூரில் இன்று அதிகாலை பலத்த மழை கொடுத்த தீர்த்தது. இதன் காரணாமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பூர் காங்கேயம்பாளையம் பகுதியில் பனியன் தொழிலாளியின் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
வீடு இடிந்ததால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல், திருப்பூர் மங்களம் சாலை, தந்தை பெரியார் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதில் வீட்டின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் சேதம் அடைந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கபட்டது. மேலும், கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்கபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Demonic rain in tirupur the city turned into a white forest houses collapsed public sheltered in schools


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->