நெல்லை காவல் அதிகாரி கொலை வழக்கு - உதவி ஆணையர் இடைநீக்கம்.!
deputy commissioner suspend for nellai police murder case
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி நேற்று முன்தினம் அதிகாலை மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஜாகீர்உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக் என்பவருக்கும் ஏற்பட்ட நிலம் தொடர்பான பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலையில் சம்பந்தம் இருப்பதாக 2 பேர் திருநெல்வேலி உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் காவலர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதில் ஏட்டு ஆனந்துக்கு காயம் ஏற்பட்டதனால், துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்து கைது செய்தனர். பின்னர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் காயமடைந்த ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ஏற்கனவே இடப்பிரச்சனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது அது குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முறையாக விசாரணை நடத்தி இருந்தால் கொலையை தடுத்து இருக்கலாம் என்பதால், முறையாக விசாரணை நடத்தாத மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், அப்போதைய உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
அதன் படி நேற்று காவல் ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில் உதவி ஆணையர் செந்தில்குமாரை இடைநீக்கம் செய்து டி.ஜி.பி. இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
deputy commissioner suspend for nellai police murder case