தன்பாத்-ஆலப்புழா விரைவு ரெயிலில் கேப்பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்கள்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில் இருந்து சேலம் செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இருப்பினும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து, சமீபகாலமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். 

இன்று அதிகாலை தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா செல்லும் விரைவு ரெயிலில் அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனை அடுத்து பொம்மிடி ரெயில் நிலையத்திற்கும், சேலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே போலீசார் அந்த ரெயில் ஏறி சோதனை நடத்தியபோது, பொதுபெட்டியில் கருப்பு நிறபை தனியாக கிடந்துள்ளது. 

அதில் 4½ கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்ததில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியாததால் 4½ கிலோ கஞ்சாவையும் சேலம் ரெயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் சேலம் ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வடமாநிலங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு தமிழகம் வழியாக கஞ்சா கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. 

பறிமுதல் செய்த கஞ்சா பை எந்த ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்றப்படுகிறது, என்பதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து கஞ்சா கடத்தும் பிரதான கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanbad Alappuzha train express ganja seized


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->