தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பணி நீக்கம்.!
dharmapuri east district dmk excuetive dismiss
தருமபுரி கிழக்கு மாவட்டத்தின் தி.மு.க. பொறுப்பாளராக செயல்பட்டு வந்தவர் தர்மசெல்வன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரியில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:- "மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. என்று யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்" என்று அவர் பேசினார். அவரது பேச்சு தொடர்பான காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது.
மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரை மிரட்டும் வகையில் தி.மு.க. பொறுப்பாளர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தர்மசெல்வன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளதாவது:- "தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக மணி நியமிக்கப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தார்.
English Summary
dharmapuri east district dmk excuetive dismiss