தர்மபுரி | சினிமா பாணியில் வனத்துறையினரை சிறை பிடித்த கிராம மக்கள்! கோரிக்கைகள் நிறைவேறுமா? - Seithipunal
Seithipunal


தர்மபுரி கிராம மக்கள் விளை நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை தடுக்காத வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்தனர். 

தர்மபுரி, பென்னாகரம் பூதிப்பட்டியில் ஏராளமான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். 

இந்நிலையில் வனப் பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் வந்து சாமை, கடலை, ராகி போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 

இது தொடர்பாக வனத்துறையினரிடம் கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று காட்டு பன்றியை வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பெயரில் உடனடியாக பென்னாகரம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

உடனே அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து, எங்களுடைய ஆடு, மாடு போன்றவை வனப்பகுதிக்குள் மேய்ந்தால் அபராதம் வசூலித்து வழக்கு பதிவு செய்கிறீர்கள். 

ஆனால் நாங்கள் பயிரிடும் பயிர்களை காட்டு விலங்குகள் சேதப்படுத்துவதால் எந்த இழப்பீடும் அரசு வழங்குவதில்லை. ஆனால் காட்டு பன்றியை வேட்டையாடியதாக தெரிவித்ததால் உடனே வந்து விட்டீர்கள். 

மாவட்ட நிர்வாகம் எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடியாக விளை நிலங்களுக்குள் வரும் காட்டு விலங்குகளை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri villagers detain forest officials


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->