சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு.. வாகன ஓட்டிகள் சிரமம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

அந்த வகையில், சென்னையில் 107-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கலம் என்று கூறப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diesel shortage continues in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->