தனபால் vs தனபால் : பாஜக உள்கட்சி பூசல்! கொலை மிரட்டல்! முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகே உட்கட்சிப்புசலில் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வீரச்சின்னம்பட்டியை சேர்ந்தவர் தனபால். பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஓபிசி அணி தலைவராக உள்ள இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி பாஜக ஒன்றிய செயலாளர் தனபால் என்பவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த இரண்டு தனபால்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், வீரச்சின்னம்பட்டி தனபால் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சாணார்பட்டி தனபால் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்த வீரசின்னம்பட்டி தனபால், இந்த முகநூல் பதிவை நீக்காவிட்டால், உன்னை கொலை செய்து விடுவேன் என்று சாணார்பட்டி தனபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவரை இழிவு படுத்தியதாகவும் தெரிய வருகிறது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சாணார்பட்டி தனபால் காவல் நிலையத்திலும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்த புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே மணிகண்டன் என்பவர், வீரசின்னம்பட்டி தனபால் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு செய்ததுடன், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் என்னை கத்தியை காட்டி மிரட்டியதாக, சாணார்பட்டி தனபால் மீது புகார் அளித்திருந்தார். 

இதனை அடுத்து இரண்டு தரப்பு புகார்களையும் விசாரணை செய்த போலீசார், வீரச்சின்னம்பட்டி தனபாலன், மணிகண்டன் மற்றும் சாணார்பட்டி தனபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வீரச்சின்னம்பட்டியை சேர்ந்த தனபால், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul BJP politics Crime


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->