திண்டுக்கல்: நாடக காதலனால் இளம்பெண் எரித்து கொலை! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலைய எல்லையில் அமைந்துள்ள அமைதி சோலை அருகே, கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்த விசாரணையில், மதுரையைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர், திண்டுக்கல் மாவட்டம் எமகாலபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவருடன் காதல்பூண்டு வந்ததும், இருவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு ஆண்டில் மாரியம்மாள் இருமுறை கர்ப்பத்தை கலைத்ததாகவும், திருமணத்திற்கு அழுத்தம் கொடுத்ததால் இருவருக்கும் இடையே வேறு பிரச்னைகள் உருவானதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கோபமடைந்த பிரவீன், மாரியம்மாளை அமைதி சோலை அருகே அழைத்து சென்று கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி சடலத்தை எரித்ததாக போலீசாருக்கு விசாரணையில் வாக்கமளித்ததாக தெரிகிறது. 

சடலத்தின் அடையாளம் தெரியாததால், போலீசார் பெண்ணின் விவரங்களை வெளியிட்டு உதவி கேட்டிருந்தனர். பின்னர் பிரவீன் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்கப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Young girl murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->