#சென்னை | ஓட்டொடுமொத்த நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்! - Seithipunal
Seithipunal


ஓட்டொடுமொத்த நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான் - தமிழக அரசின் மழைநீர் வடிகால் பணிகளை கடுமையாக விமர்சித்த இயக்குனர் சீனு இராமசாமி! 

சென்னையை அடுத்த மாங்காடு நகரத்தில், மழைநீர் வடிகால் பள்ளத்தில் (பணிகள் முடிக்கப்படாத) தவறி விழுந்து லட்சுமிபதி என்ற தனியார் நிறுவன ஊழியர் இன்று காலை உயிரிழந்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாமல் இருப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது.

கடந்த மாதம் தோண்டப்பட்ட மழை நீர் வடிகால் பள்ளத்தில் செய்தியாளர் ஒருவர் விழுந்து பலியாகிய நிலையில், இன்று  மாங்காடு அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்திருப்பது பெரும் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் தடுப்பரண்களை வைப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல. உடனடியாக முடிக்க வாய்ப்புள்ள பணிகளை மழையில்லாத நாள்களில் நிறைவு செய்ய வேண்டும். அத்தகைய வாய்ப்பில்லாத மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடி விபத்துகளை தவிர்க்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிரபல தமிழ்த்திரைப்பட இயக்குனர் சீனு இராமசாமி விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும்.

அது ஒரு சிகை தொழிலாளி முடித்திருந்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும்.

ஓட்டொடுமொத்த நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்" என்று தமிழக அரசின் மழைநீர் வடிகால் பணிகளை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Seenu Ramasamy Say About Mangadu accident death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->