திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


எழுது திறன், வாசிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு பள்ளி கல்வி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில்  அரசு பள்ளிகளில் எழுது திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித திறன் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களது திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எழுதுதிறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித திறன் குறைவான மாணவ மாணவிகளின் விவரங்களை கண்டறிந்து அவர்களுக்கு இந்த கல்வியாண்டிலும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 

இது குறித்த விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disabled students Special training


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->