அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் கடத்தல் - போராட்டத்தில் குதிக்கும் தேமுதிக! - Seithipunal
Seithipunal


அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரி தேர்முதிக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்து, வருகிற 28ஆம் தேதி ஆலங்குளத்தில் தேமுதிக பொருளாளர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நறைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை கலக்கம் விடுத்துள்ள அறிவிப்பில், "அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரியும்.

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாக வருகிற 28ஆம் தேதி காலை 11 மணி அளவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

இதில் ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்" என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் தலைமை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK protest Announce for Sand Robbery issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->