புதிய குற்றவியல் சட்டங்கள் - போராட்டத்தில் களமிறங்கும் திமுக.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள, மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., தலைமையில், மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்ற. அந்தக் கூட்டத்தில், மத்திய அரசால் அமல் படுத்தப்படும் மூன்று குற்றவியல் சட்டங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மூன்று கட்ட போராட்டங்கள் நடத்துவது என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, வரும் 5ம்தேதி மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

வரும் 6ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. குற்றவியல் சட்டங்களின் பாதகங்களை வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறியும் வகையில், தமிழகம் முழுதும் கண்டன கருத்தரங்குகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk announce protest against three new criminal laws


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->